ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் ஆப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நெதர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.இதில் இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி வருகின்ற ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பீட்டர் சீலர் தலைமையிலான நெதர்லாந்து அணியில் மேக்ஸ் ஓடவுட், ஸ்காட் எட்வட்ர்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
நெதர்லாந்து அணி: பீட்டர் சீலர் (கேப்டன்), கொலின் அக்கர்மேன், மேக்ஸ் ஓ’டவுட், ஸ்காட் எட்வர்ட்ஸ், பிராண்டன் குளோவர், பிரெட் கிளாசென், ரியான் க்ளீன், போரிஸ் கோர்லி, கிளேட்டன் ஃபிலாய்ட், சாகிப் சுல்பிகர், அசாத் சுல்பிகர், பாஸ் டி லீட், விவியன் கிங்மா, ஆர்யன் தத்,பிலிப் போயிஸ்வெயின்.