Categories
உலக செய்திகள்

‘இனிமேல் ஜனநாயகம் இல்லை’…. அமலுக்கு வரும் ஷரியத் சட்டம்…. பேட்டி அளித்த தலீபான்களின் மூத்த தலைவர்….!!

ஆப்கானிஸ்தானில் ஷரியத் சட்டம் அமலுக்கு வரும் என்று தலீபான்களின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் தலீபான்களுக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஜலாலாபாத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பர்தா அணியாத 3 பெண்களை தலீபான்கள் சுட்டுக் கொன்றனர். இது குறித்து தலீபான்களின் மூத்த தலைவர் வாஹித்துல்லா ஷாஷ்மி செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது “இனி ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் என்ற பேச்சிற்கே இடமில்லை. விரைவில் ஷரியத் சட்டம் அமலுக்கு வரவுள்ளது. ஏனெனில் ஜனநாயத்திற்கான அடித்தளமே இல்லை. அவ்வாறு இருப்பின் ஆப்கானிஸ்தான் ஏன் ஜனநாயக நாடாக இருக்க வேண்டும்” என்று கேளிக்கையாக கூறியுள்ளார். குறிப்பாக கடந்த  1996 முதல் 2001 வரை தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் எவ்வாறு ஆட்சி புரிந்தார்களோ அதே போன்றே தற்பொழுதும் ஆட்சி நடைபெறும்.

அப்பொழுது  மூத்த தலைவர் முல்லா உமர் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தார். தற்போது நாட்டின் நிர்வாகம் குறித்து கண்காணிக்க ஆட்சி மன்றக்குழு அமைக்கப்படும். அதில் நாட்டின் அதிபரான அக்குஜண்டா ஆட்சி மன்றக்குழுவின் தலைவராக இருப்பார். மேலும் புதிய அரசு அமைவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பானது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் மீண்டும் இருபது வருடங்களுக்கு பின்னோக்கிச் செல்வது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

Categories

Tech |