Categories
உலக செய்திகள்

எல்லையில் காத்து கிடக்கும் பொதுமக்கள்…. துணை நிற்கும் பாகிஸ்தான்…. செய்தி வெளியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர்….!!

காபூலுக்கு உதவி புரிய அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் ஆப்கானைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதனையடுத்து அவர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய அந்நாட்டு எல்லையில் காத்துகிடகின்றனர் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்  ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதில் “உலக அளவில் அனைவரும் காபூலுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

அதிலும் இஸ்லாமாபாத் தலீபான்களின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் ஒரு முக்கிய தீர்வை எடுப்பதற்கு உண்மையான பங்கினை அளிக்கும். அதிலும் காபூலை கைப்பற்றிய தலீபான்களுக்கு எதிரான  நடவடிக்கைகளை வெளிப்படையாக மேற்கொள்ளும். மேலும் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இறுதியாக ஆப்கானிஸ்தானில் அமைதியான, ஒற்றுமையான ஜனநாயக நாட்டை உருவாக்குவதே எங்களின் நோக்கமாகும் “என்று கூறியுள்ளார்.

Categories

Tech |