ஆப்கானில் ஆபத்தில் உள்ளவர்களை அழைத்து வருவதற்கு ஜெனீவா சுவிட்சர்லாந்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்று வருகின்றனர். அதிலும் ஆப்கானியர்களை இஸ்லாமிய நாடுகளே ஏற்றுக் கொள்ளாத நிலையில் ஜெனீவா மாகாணம் அவர்களுக்காக கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. ஏற்கனவே சுவிட்சர்லாந்துக்காக பணியாற்றிய ஆப்கானியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் என்று மொத்தம் 23௦ பேரை காபூலில் இருந்து சுவிட்சர்லாந்து அரசு அழைத்து வந்துள்ளது.
இது மட்டுமின்றி ஆபத்திலுள்ள அனைத்து ஆப்கானியர்களையும் சுவிட்சர்லாந்தில் அனுமதிக்க வேண்டும் என்று பெடரல் அரசிடம் ஜெனீவா கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் ஆப்கானில் சேவை புரிந்து வரும் செஞ்சிலுவை சங்கம் மற்றும் DOCTORS WITHOUT BORDERS போன்ற அமைப்புகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்தக் கோரிக்கையானது அனைவரையும் நெகிழவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.