Categories
உலக செய்திகள்

தேசிய விளையாட்டு வீராங்கனை…. கொடூர கொலை…. தொடரும் தலீபான்களின் அட்டூழியம்….!!  

ஆப்கானில் பெண் வீராங்கனை தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அங்கு நினைத்து பார்க்க முடியாத வகையில் பல கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக அந்நாட்டு பெண்களின் உரிமை பறிக்கப்பட்டு வருகின்றது. மேலும் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி இல்லை, அரசியல், விளையாட்டு உள்ளிட்ட சமூக நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்ககூடாது என தலீபான்கள் தடை விதித்துள்ளனர்.

தற்போது ஆப்கானின் தேசிய பெண்கள் வாலிபால் குழுவினை சேர்ந்த Mahjubin Hakimi என்ற பெண் வீராங்கனை கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஆப்கான் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வாலிபால் குழுவின் பயிற்சியாளர் Suraya Afzali அளித்த பேட்டியில் கூறியதாவது, “தேசிய பெண்கள் வாலிபால் குழுவைச் சேர்ந்த Mahjubin Hakimi-ஐ தலிபான்கள் தலை துண்டித்தும் நாக்கு அறுத்தபடியும் துடிதுடிக்க கொலை செய்துள்ளனர்.

மேலும் இது குறித்து வெளியில் எதுவும் சொல்லக் கூடாது என்று Mahjubin Hakimi-இன் பெற்றோரை தலீபான்கள் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் பெண் வீரங்கனையின் தலை துண்டிக்கப்பட்ட படத்தை தலீபான்கள் வெளியிட்டனர்” என்றும் கூறினார். குறிப்பாக தலீபான்கள் ஆப்கானை கைப்பற்றியதும் அந்நாட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்தனர். ஆனால் 2 வீரர்கள் மட்டுமே நாட்டை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |