Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமை….? மரணத்தின் விளிம்பில் மக்கள்…. ஆப்கானிஸ்தானின் பரிதாப நிலை….!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பட்டினியால் பலியாகும் மக்களை காக்க வேண்டும் என்று ஐ.நா சபையின் தலைவர் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு பொருளாதார நெருக்கடி அதிகரித்திருக்கிறது. சர்வதேச சமூகம், ஆப்கானிஸ்தானிற்கு வெளிநாடுகளில் இருக்கும் சொத்துகளை முடக்கி விட்டது. அந்நாட்டிற்கு பொருளாதார ஆதரவும் கிடைக்கவில்லை. மேலும், அமெரிக்க அரசு, தங்கள் நாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தானின் வெளிநாட்டு இருப்புகள் ஏழு பில்லியன் டாலர்களை முடக்கியிருக்கிறது.

இந்த பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் பட்டினியால் வாடி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே, தற்போது ஆப்கானிஸ்தான் மக்கள் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார்கள். 8.7 மில்லியன் மக்கள் பசியால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சர்வதேச நிதி, மருத்துவர்கள், மின் பொறியாளர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் போன்றோருக்கு ஊதியத்தை வழங்க அனுமதியளிக்க வேண்டும் என்றும் ஆப்கான் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்குமாறும் சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் வைக்கிறேன் என்று ஐ.நாவின் பொது செயலாளரான அன்டோனியோ குட்டெரெஸ் கூறியிருக்கிறார்.

Categories

Tech |