அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தானிற்குரிய சொத்துகளை விடுவிக்க வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் பேரணி நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியவுடன் அந்நாட்டின் மத்திய வங்கிக்குரிய வெளிநாடுகளில் இருக்கும் 67,500 கோடி ரூபாய் சொத்துக்கள் அமெரிக்க அரசாங்கத்தால் முடக்கப்பட்டது.
தற்போது, அந்த தொகையிலிருந்து 26,250 கோடி ரூபாயை இரட்டை கோபுர தாக்குதலில் பலியான மக்களின் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா தீர்மானித்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில், ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கு முன்பாக அந்நாட்டு மக்கள் சென்றிருக்கிறார்கள்.