Categories
உலக செய்திகள்

தயவுசெய்து கதவை திறங்க..! விமான நிலையத்தில் கதறிய இளம்பெண்… வெளியான கண்கலங்க வைக்கும் வீடியோ..!!

இளம்பெண் உட்பட ஆப்கானியர்கள் பலரும் காபூல் விமான நிலையத்தின் கதவை திறக்குமாறு அமெரிக்க இராணுவத்தினரிடம் கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதைடுத்து சுமார் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் காபூலில் இருந்து செல்லும் பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். மேலும் அமெரிக்க ராணுவ படையினர் காபூல் விமான நிலையத்திற்குள் நுழைந்ததோடு அங்கு உள்ள தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றுவதற்கு வசதியாக விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் ஆப்கானியர்கள் பலரும் விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் குவிந்ததோடு தங்களை விமான நிலையத்திற்குள் அனுமதிக்குமாறு கெஞ்சிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் அந்த வீடியோவில் தலிபான்கள் வந்து தலையை துண்டித்து விடுவார்கள் எனவும், தயவுசெய்து கதவை திறந்து நாங்கள் தப்பிக்க உதவுங்கள் என்று ஆப்கான் இளம்பெண் ஒருவர் அமெரிக்க ராணுவ வீரர்களிடம் கதறிய காட்சி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Categories

Tech |