Categories
உலக செய்திகள்

‘அனைவரையும் உள்ளடக்கிய அரசு’…. ஆலோசனை நடத்திய பாகிஸ்தான் பிரதமர்…. டேவிட் பீஸ்லியுடன் சந்திப்பு….!!

ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசை உருவாக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் தலைநகரமான இஸ்லாமாபாத்தில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் ஐ.நா உலகளாவிய உணவு திட்டத்தின் செயல் இயக்குனர் டேவிட் பீஸ்லியை நேற்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது அவர்கள் இருவரும் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

மேலும் தலீபான்களிடம் சிக்கிய ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். அதிலும் ஆப்கானில் எந்த ஒரு நெருக்கடியை தவிர்ப்பதற்கும், அமைதி மற்றும் நிலைத்த தன்மையை உறுதி செய்வதற்கும் அந்நாட்டுடன் இணைந்து மற்ற உலக நாடுகளும் நேர்மறையான வழிமுறைகளில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |