சுவிட்சர்லாந்து அரசு, ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் தூதரகத்தில் பணிபுரியும் 40 பணியாளர்கள் உட்பட 200 நபர்களை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க தீர்மானித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு நாளும் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரிக்கிறது. பல்வேறு முக்கிய மாகாணங்களை கைப்பற்றி வருகிறார்கள். தற்போது தலைநகருக்கு அருகில் இருக்கும் முக்கிய நகரை கைப்பற்றி இருக்கிறார்கள். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் காபூல் நகரையும் கைப்பற்றலாம் என்ற பதற்றம் பொது மக்களிடையே நிலவுகிறது.
இதனால் மக்கள் அந்நகரை விட்டே வெளியேறி வருகிறார்கள். காபூல் நகரத்தில் இருக்கும் பல்வேறு நாட்டின் தூதரகங்கள் அடைக்கப்பட்டு, அங்கிருக்கும் பணியாளர்களை இராணுவத்தினரின் உதவியோடு மீட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசு, காபூல் நகரின் தங்கள் தூதரகத்தில், பணிபுரியும் 40 பணியாளர்களை மனிதாபிமானத்தின் அடிப்படையில், தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க தீர்மானித்துள்ளது. மேலும் அவர்களின் குடும்பத்தினர் 200 நபர்களையும் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கிறது.