Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானில் தொடரும் அட்டூழியம்”.. பேருந்தில் குண்டுவெடிப்பு.. வெடித்து சிதறி 11 பேர் பரிதாப பலி..!!

ஆப்கானிஸ்தானில் பேருந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு சுமார் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் உள்ள தெற்கு ஜாபுல் என்ற மாகாணத்தில் பேருந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 11 நபர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும்  சுமார் 25 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்களும் அடங்குவர்.

ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்க ராணுவ ஆப்கானிஸ்தானிலிருந்து  மொத்தமாக விலக்கப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் தீவிரவாதிகளின் அட்டூழியங்கள் தொடர்ந்து வருகிறது என்று வேதனை தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |