ஆப்கானிஸ்தான் தலைநகரின், பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் அரச படையினர் மற்றும் தலீபான் தீவிரவாதிகளுக்கு இடையே கடந்த 20 வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே அமெரிக்கா, அரச படைக்கு ஆதரவாக தங்கள் நேட்டோ படைகளை ஆப்கானிஸ்தானில் களமிறக்கியது. ஆனால் அமைதிப் பேச்சுவார்த்தையின் போது தலீபான்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து பிற நாட்டு படைகள் வெளியேறுமாறு கோரினர்.
எனவே, அமெரிக்கா தன் படைகளை திரும்பப்பெற்றது. இதனையடுத்து மீண்டும் ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடங்கியது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகரான, காபூலில் இன்று மாலை சுமார் நான்கு மணிக்கு ஹசாரா என்ற நகரத்தின் சாலையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
அடுத்தடுத்து அதிகமான பகுதிகளில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பல பேர் உயிரிழந்திருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது வரை எந்த அமைப்பினரும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்காத நிலையில், பாதுகாப்பு படையினர் தலீபான் தீவிரவாதிகள் தான் இத்தாக்குதலுக்கு காரணம் என்று கருதுகிறார்கள். எனவே விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.