பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் ஆப்கானிஸ்தான் நாட்டின் தூதர் மகளை கடத்தி கொடுமைப்படுத்திய மர்மநபர்களை 48 மணி நேரத்தில் பிடிக்க உத்தரவிட்டிருக்கிறார்.
பாகிஸ்தான் நாட்டின் ஆப்கானிஸ்தான் தூதரான நஜிபுல்லா அலிகிலின் மகளான சில்சிலாவை இஸ்லாமாபாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மர்ம நபர்கள் கடத்திச்சென்றனர். அதன்பின்பு அவரை கொடூரமாக சித்திரவதை செய்து இரவில் விடுவித்துள்ளனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
இந்நிலையில் உள்துறை மந்திரி ஷேக் ரஷீத் அகமதுவிற்கு, அந்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய இம்ரான்கான் உத்தரவிட்டிருக்கிறார். மேலும் பிரதமர் கூறியுள்ளதாவது, இஸ்லாமாபாத்தின் காவல்அதிகாரிகள், பிற சட்ட அமலாக்க நிறுவனங்கள் அந்த நபர்களை கைது செய்வதில் அதிக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை 2 நாட்களுக்குள் பிடித்தாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். எனவே அதன்படி, இச்சம்பவம் தொடர்பில், தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.