ஆப்கானிஸ்தான் நாட்டின் தூதருடைய மகள் கடத்தப்பட்டு பாகிஸ்தானில் கொடுமை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டின் ஆப்கானிஸ்தான் தூதரான நஜிபுல்லா அலிகெய்லின் என்பவரின் மகளான சில்சிலா அலிகெய்லை இஸ்லாமாபாத்தில் ராணா மார்க்கெட்டிற்கு அருகில் நேற்று சில மர்ம நபர்கள் கடத்தினர். அதன்பின்பு அவரை கொடூரமாக சித்திரவதை செய்துள்ளனர். தற்போது விடுவிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை கண்டித்து ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, ஆப்கானிஸ்தானின் தூதர்களும் அவர்களின் குடும்பத்தாரும் பாகிஸ்தானில் இருக்கும் தூதரகத்தின் பணியாளர்களுக்கான பாதுகாப்பும் வருத்தமளிப்பதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தானின் தூதரகத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தான் அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.