Categories
உலக செய்திகள்

உலகளவில் பாலின இடைவெளி பட்டியல்…. மிகவும் மோசமான இடத்தில் ஆப்கானிஸ்தான்…!!!

உலக பொருளாதார மன்றம் உலக அளவில் பாலின இடைவெளிக்கான பட்டியல் ஒன்றை வெளியிட்ட நிலையில் அதில் ஆப்கானிஸ்தான் மிகவும் பின்தங்கிய நாடாக உள்ளது.

உலக பொருளாதார மன்றம் உலக நாடுகளில் பாலின இடைவெளிக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதில் 146 நாடுகள் இருக்கும் நிலையில், அதிக பாலின இடைவெளி இல்லை என்ற பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் ஐஸ்லாந்து, இங்கிலாந்து, நார்வே, நியூசிலாந்து மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் உள்ளன.

மிகவும் அதிக மோசமான பாலின இடைவெளி கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் நாடாக ஆப்கானிஸ்தான் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. அதற்கு அடுத்ததாக காங்கோ, ஈரான் போன்ற நாடுகள் இருக்கின்றன. அதிகமான பாலின இடைவெளிக்கான அளவானது 68.1% ஆகும்.

இந்த இடைவெளி இல்லாமல் ஆண் மற்றும் பெண் சமமான நிலைக்கு வருவதற்கு இன்னும் 132 வருடங்கள் ஆகும். ஐந்து சதவீதத்திற்கும் மேற்பட்ட பாலின இடைவெளி கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்திலும், அதனைத்தொடர்ந்து கத்தார், அஜர்பைஜான், சீனா இந்தியா போன்ற நாடுகளும் இருக்கின்றன.

Categories

Tech |