ஆப்கானிஸ்தானில் முன்னாள் அரசு படை வீரர்கள் உட்பட 13 பேரை தலீபான்கள் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலீபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். இதனைதொடர்ந்து அங்கு தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் முந்தைய ஆட்சியில் தலீபான்களுக்கு எதிராக செயல்பட்ட அரசு படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக தலீபான்கள் தற்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் ஹைதர் மாவட்டத்திற்குள் கடந்த 30ஆம் தேதி நுழைந்த தலீபான்கள் இதற்கு முந்தைய ஆட்சியில் பணியாற்றிய அரசு படைவீரர்கள் 11 பேர் என மொத்தம் 13 பேரை கொலை செய்துள்ளனர். இதில் ஒரு 17 வயது சிறுமியும் அடங்கும். என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அம்னேஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.