ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் போலியோ சொட்டு மருந்து செலுத்திய மருத்துவ பணியாளர்கள் 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசபடையினர் மற்றும் தலீபான் தீவிரவாதிகளுக்கு இடையே கடந்த வருடம் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்பு தலீபான் தீவிரவாதிகள் அரசு பணியாளர்கள், ஊடகத் துறையை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் போன்றோரை தொடர்ந்து கொலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நாட்டில் மூன்று பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது ஜலதாபாத் என்ற நகரத்தில் தலீபான் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில், சொட்டு மருந்து செலுத்தும் பணியில் இருந்த 4 பணியாளர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 3 மாதங்களுக்கு பின்பு தொடங்கப்பட்ட போலியோ தடுப்பு மருந்து செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது.