பெர்த்தில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்தது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இதனால் சூப்பர் 12 சுற்றிலுள்ள குரூப் 1 பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து, இலங்கை ஆகிய 6 அணிகள் இடம் பிடித்துள்ளது. குரூப் 2 பிரிவில் வங்கதேசம், இந்தியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய 6 அணிகள் இடம்பெற்றுள்ளன.. ஒட்டுமொத்தமாக 12 அணிகள் சூப்பர் 12ல் இருக்கின்றன.
இந்நிலையில் சூப்பர் 12 சுற்றில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகிறது.. அதில் முதலாவதாக குரூப் 1 பிரிவிலுள்ள ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்திய நேரப்படி இன்று மதியம் மோதியது. இதில் ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.. இதனைத்தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (அக்டோபர் 22ஆம் தேதி) இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு பெர்த்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்..
Our XI to kick off our World Cup campaign! 🏏🌏🏆
We win the toss and bowl ⚪#T20WorldCup | #England
— England Cricket (@englandcricket) October 22, 2022
🚨 Toss Alert 🚨
We have lost the toss and have been put into bat first by @englandcricket. #AfghanAtalan | #T20WorldCup2022 | #SuperCola | #AFGvENG pic.twitter.com/5dbptuHrsY
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 22, 2022