Categories
உலக செய்திகள்

உலகின் முதல் மலேரியா தடுப்பூசி…. ஆப்ரிக்க குழந்தைகளுக்கு அனுமதி…. உலக சுகாதார அமைப்பு தகவல்….!!

ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகளுக்கு மலேரியா தடுப்பூசியை செலுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

உலகளவில் பல ஆண்டுகளாக குழந்தைகள் மற்றும் சிசுக்களின் கொல்லை நோயாக மலேரியா உள்ளது. தற்போது 100 ஆண்டு கால ஆராய்ச்சிக்கு பின் மலேரியாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகின் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. மேலும் மலேரியாவை தடுக்கும் திறன் கொண்டதாக ‘RTS,S’ தடுப்பூசி 6 ஆண்டுகளுக்கு முன்பு நிரூபிக்கப்பட்டது.

குறிப்பாக கானா, கென்யா மற்றும் மாலவி உள்ளிட்ட நாடுகளில் இந்த தடுப்பூசியை சோதனை ரீதியாக பயன்படுத்தபட்டது. இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் மலேரியா நோய்க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆப்பிரிக்காவில் குழந்தைகள் மற்றும் சிசுக்களுக்கு ‘RTS,S’ மலேரியா தடுப்பூசி செலுத்த  உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது, “இது வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும். மலேரியா தடுப்பூசி குழந்தகைளுக்காக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டது ஆகும். மேலும் இது விஞ்ஞானம், குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் மலேரியா கட்டுப்பாடுகளில் ஒரு முன்னேற்றமாக உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் உயிர்களை இது காப்பாற்றும்” என்றும் தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்காவில் கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் 2,60,000 குழந்தைகள் மலேரியாவால் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் உலகளவில் பெரும் சோகத்தை உண்டாக்கியதும் நினைவுகூரத்தக்கது ஆகும்.

Categories

Tech |