Categories
தேசிய செய்திகள்

“மனித உயிருக்கே எமனான” ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள்…. தடையை மீறி விற்பனை…!!

உயிருக்கு ஆபத்தான ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் தடையை மீறியும் விற்பனை செய்யப்படுகின்றது.

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் தான் வாழ்வதற்காக பிற மீன் இனங்களை அடியோடு அழிக்கும். எனவே இவற்றை அறவே தவிர்க்க வேண்டும் என்று மீனவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. நம் நாட்டில் உள்ள குளம் மற்றும் ஏரி மீன்களில் கெளுத்தி மீன்கள் மிக முக்கியமானவை. நம் நாட்டை சேர்ந்த குளத்து மீன்களை உண்பதால் எந்த பாதிப்பும் கிடையாது. அவை சுவையாகவும் சத்தாகவும் இருக்கும். ஆனால் சமீபகாலமாக நம்முடைய நீர்நிலைகளில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை பலரும் வளர்க்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த மீன்கள் மிகவும் ஆபத்தானவை.

இந்த மீன்கள் ஒரே சீசனில் 4 லட்சம் முட்டைகள் இடக்கூடியவை. ஆனால் நம் நாட்டு கெளுத்தி மீன்கள் 15 ஆயிரம் முட்டைகள் வரை தான் இடும். ஆப்ரிக்க மீன்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் நாட்டு மீன்களின் இனங்கள் அழிந்து விடும். சாக்கடை தண்ணீர் குடித்து உயிர்வாழும் திறன் கொண்ட இந்த ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள், அதிக அளவில் நீரிலுள்ள ஈயம் மற்றும் பித்தளை போற பொருட்களை சாப்பிடுகின்றன. எனவே இந்த மீன்களை உண்பது ஆபத்தானது என்று கூறப்படுகிறது.

எனவே இந்த ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களுக்கு மத்திய மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இறைச்சி கடைகளில் இருந்து கிடைக்கும் கழிவு பொருட்களை இந்த மீன்கள் வளர்ப்பவர்கள் மீன்களுக்கு உணவாக கொடுக்கிறார்கள். இதனால் தோல் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது. ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்கள் வளர்ப்பது விற்பனை செய்வது தடை செய்யப்பட்டிருந்தது இருப்பினும் முழுவதும் சட்டத்திற்குப் புறம்பான விற்பனையும் அதிகரித்து உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |