ஜெர்மன் நாட்டின் ஒரு கிழக்கு மாகாணத்தில், மற்றொரு காட்டுப்பன்றிக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் இருப்பது, கண்டறியப்பட்டுள்ளது.
ஜெர்மனில், உள்ள Brandenburg என்ற மாகாணத்தில் இருக்கும் Uckermark என்னும் இடத்தில், மற்றொரு காட்டுப்பன்றிக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது என்று மாகாண சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதற்கு முன்பு, இதே பகுதியில், ஒரு காட்டுப்பன்றிக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 2020ஆம் வருடத்தில், செப்டம்பர் மாதத்தில் Brandenburg மாகாணத்தில், முதன்முறையாக ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, தற்போது வரை, மொத்தமாக 1,670 காட்டுப்பன்றிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், Saxony என்ற மாகாணத்திலும், 456 காட்டுப்பன்றிகளுக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 2020ஆம் வருடத்தில், செப்டம்பர் மாதம் ஜெர்மனியில் தான் முதல் தடவையாக பன்றிகளுக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.அதன்பின்பு, சீனா மற்றும் பன்றி இறைச்சிகளை பயன்படுத்தக்கூடிய பல்வேறு நாடுகளும், அந்த நாட்டிலிருந்து, பன்றிகள் இறைச்சியை இறக்குமதி செய்யவில்லை.
அதாவது, ஜெர்மன் நாட்டிற்குள், போலந்திலிருந்து செல்லக்கூடிய காட்டுப்பன்றிகளிடமிருந்து தான் பன்றிக்காய்ச்சல், பரவியிருக்கிறது. இதனால், மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எனினும், பன்றிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, போலந்து நாட்டின் எல்லையில், காட்டுப்பன்றிகள் உயிரிழந்து கிடக்கிறதா? என்று அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.