Categories
மாநில செய்திகள்

12 வருடங்களுக்குப் பிறகு….. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் CUMTA கூட்டம்….. மகிழ்ச்சியில் ஆணைய நிர்வாகிகள்….!!!!!

தமிழகத்தில் கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தின் போது CUMTA எனப்படும் ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் சென்னை மாநகராட்சி, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், மாநகரப் போக்குவரத்து கழகம், சிஎம்டிஏ, மாநில போக்குவரத்து துறை, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டு வசதி போன்றவைகள் அடங்கும். இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை அதிமுக ஆட்சி காலத்தில் கிடப்பில் போடப்பட்ட நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் அதன் தலைவராக இருந்தார். இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப் பட்டு அதன் தலைவராக முதல்வர் இருப்பார் என்று கடந்த 2020-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்கப்படும் என்று தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது வீட்டு வசதி வாரியம் கூறியது. அதன்படி 18-க்கும் மேல் உள்ள திட்டங்கள் ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்த திட்டம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 12 வருடங்களாகும் நிலையில் முதல் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அடுத்த வாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஆணையத்தின் அதிகாரிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மேலும் இந்த கூட்டத்தின் போது MRTS வணிகமயமாக்கல், மல்டி மாடல் ஒருங்கிணைப்பு, மல்டி‌‌ மாடல் ஒருங்கிணைப்பு, பொதுவான டிக்கெட் பயன்பாடும் மற்றும் ஒருங்கிணைந்த மொபைலிட்டி ப்ளான் போன்றவைகள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

Categories

Tech |