Categories
சினிமா தமிழ் சினிமா

15 வருஷம் ஆகிட்டு…. நான் அந்தப் படத்துல நடிக்கவே இல்ல…. “ஒன்பது ரூபாய் நோட்டு” படத்தால் நெகிழ்ந்து போன சத்யராஜ்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் தங்கர்பச்சான் இயக்கத்தில் நடித்த ஒன்பது ரூபாய் நோட்டு படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் மனம் நெகிந்து சத்யராஜ் ஒன்பது ரூபாய் நோட்டு படம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, அந்த படத்தில் நான் நடிக்கவில்லை. அந்த கதாபாத்திரமாகவே அவர் என்னை வாழ வைத்தார். இயக்குனர் தங்கர்பச்சான் ஒரு சிறந்த படைப்பாளி என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஒன்பது ரூபாய் நோட்டு படம் குறித்து தங்கர்பச்சான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, கடந்த 2007-ம் ஆண்டு ஒன்பது ருபாய் நோட்டு படம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடிகர் சத்யராஜ், அர்ச்சனா நாசர், ரோகினி மற்றும் நடன இயக்குனர் சிவசங்கர் ஆகியோர் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தனர். மேலும் இவ்வாறான மண் சார்ந்த படைப்புகளை என் உயிர் உள்ளவரை படைக்க வேண்டும் என்பதே என்னுடைய மனமார்ந்த விருப்பம் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |