நடிகை மீனா 21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையானார். சொல்லப்போனால் அவரது திறமையான நடிப்பிற்கென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை மீனா தற்போது ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும் த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மீனா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிகை மீனா நடிக்க உள்ளார். நடிகர் பாலகிருஷ்ணாவும், நடிகை மீனாவும் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான கிருஷ்ண பாபு என்ற திரைப்படத்தில் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்கள் இருவரும் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.