Categories
அரசியல் தேசிய செய்திகள்

24ஆண்டுகளுக்கு பின்…! நேரு குடும்பம் இல்லை… புதிய தலைவராக கார்கே…! தேர்தல் முடிவு அறிவிப்பு …!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு பதிவு என்பது இன்று காலை சரியாக 10 மணியளவில்  டெல்லியில் இருக்கக்கூடிய அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் மதுசூதன் மிஸ்திரி மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் ஜோதிமணி உள்ளிட்டோர் தலைமையில் தொடங்கி நடைபெற்றது.

ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய மல்லிகார்ஜுனார் கே கிட்டதட்ட ஒட்டுமொத்தமாக பதிவான 9500 வாக்கில்,  7000க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளார். கிட்டத்தட்ட  மல்லிகார்ஜுனா காக்கே வெற்றி உறுதியாகிவிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது இன்னும் சில மணி நேரங்களில் தேர்தல் ஆணையர் மதுசூதனன் மிஸ்திரி அறிவிக்க இருக்கிறார்.

அவரை எதிர்த்து களம் கண்ட சசிதரூர் திருவனந்தபுரத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்  1060 வாக்குகள் மட்டுமே தற்போது வரை பெற்றிருக்கிறார். வாக்குகள் என்பது இன்னும் சில மணி நேரங்களில் முழுமையாக எண்ணப்பட்டு முடிக்கப்பட்ட இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் தேர்வு செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |