திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள நல்லாட்டூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மகள் மணிமேகலை.. இவர் திருத்தணியிலுள்ள மருந்து கடையில் பணிபுரிந்து வந்தார். மணி மேகலையை திருத்தணியை அடுத்துள்ள வேறு பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவரின் மகன் பாலிடெக்னிக் பேராசிரியரான ராஜ்குமார் என்பவர் கடந்த 4 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தது மட்டுமில்லாமல், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சகஜமாகப் பழகியுள்ளார்.
இந்தநிலையில் இருவரும் இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலன் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகக் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் பலமுறை காதலன் ராஜ்குமாரிடம் பேசியும் திருமணம் செய்ய சம்மதிக்காததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் மணிமேகலை.. இதையடுத்து மன வேதனையில் இருந்த மணிமேலை இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தனது உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கழகமாசத்திரம் போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.. 4 வருடம் காதலித்தும் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது..