Categories
தேசிய செய்திகள்

40 நாட்களுக்கு பிறகு மதுவிற்பனை… “ஒரு ஊரே கியூ-ல நிக்குது”: கேள்விக்குறியில் சமூக இடைவெளி..!

ஆந்திராவின் சித்தூரில், மது கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து 1000திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். மேலும் சமூக இடைவெளி என்பது சுத்தமாக கடைபிடிக்கவில்லை.

நாடு முழுவதும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக மது கடைகள் மூடப்பட்டு இருந்தன. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதேசமயம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற வண்ண மாவட்டங்களுக்கு ஏற்ப விதிமுறைகள் மாற்றப்படும் என தெரிவித்திருந்தது.

இதற்கான விரிவான வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டது. மேலும், 3-ம் கட்ட ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், மால்கள் இல்லாமல் தனி கட்டடத்தில் இயங்கு மது கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதுவிற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அனுமதி வழங்கப்பட்ட மாநிலங்களில் இன்று காலை 9 மணி முதல் மது விற்பனை தொடங்கியுள்ளது. இதே போன்று ஆரஞ்சு, பச்சை மண்டலங்களிலும் இதே போன்று மது விற்பனை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்படுவதால் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆந்திராவின் ஒரு பகுதியில், மதுபானங்களை வாங்க சுமார் 1000திற்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் சமூக இடைவெளி என்பது சிறிதும் பின்பற்றப்படவில்லை. அதிக மக்கள் திரண்டதால் மது கிடைக்காதோ என்ற வேதனையில் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு வரிசையில் நின்ற வண்ணம் உள்ளனர். மேலும், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல் அதிகாரிகள் திணறி போய் நின்றனர்.

Categories

Tech |