Categories
சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

55 நாட்களுக்கு பிறகு கீழடியில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கியது… தொல்லியல் துறை!!

கீழடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியது.

கடந்த ஏப்.24ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரி சிவானந்தம் தகவல் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், 4ம் கட்டமாக ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், 3ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது தமிழக அரசு தரப்பில் சில ஊரடங்கு தளர்வுகள் வெளியிடப்பட்டன. அதில் கட்டுமான பணிகள் தொடங்கவும், 50% தொழிலாளர்களுடன் தொழில்நிறுவனங்களை தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு எந்த வித தளர்வுகளும் இல்லை என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 4ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபொழுது, மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி, பாதிப்பு குறைவாக உள்ள சுமார் 25 மாவட்டங்களில் தொழில் நிறுவனங்களை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

100 பேருக்கு குறைவாக இருந்தால் அந்த தொழில் நிறுவனங்கள் 100% தொழிலாளர்களுடன் பணியை தொடங்க அனுமதி அளித்துள்ளது. மேலும் மாவட்டத்திற்குள் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சமுக இடைவெளியுடன் கீழடியில் அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளது.

Categories

Tech |