கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஆறு நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தாலும் சிற்றாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்ததாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் குளிக்க கடந்த 6 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் திருப்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் குடும்பங்களுடன் நண்பர்களுடன் குளித்து மகிழ்ந்தனர்.