பிரபல நடிகை நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
தமிழ் சினிமாவில் வெளியான காதல் சொல்ல வந்தேன் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மேக்னா ராஜ். இப்படத்தை தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் சிரஞ்சீவி சார்ஜா எதிர்பாராத விதமாக கடந்தாண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். அப்போது நடிகை மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்துள்ளார். இதையடுத்து நடிகை மேக்னா ராஜ் தற்போது 9 மாத ஆண் குழந்தையுடன் இருக்கிறார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் திரையுலகிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தான் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.
https://www.instagram.com/p/CRoHdKCL-up/?utm_medium=copy_link