தமிழகத்தில் வருகிற 16 ஆம் தேதிக்கு பிறகு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன், தமிழகத்தில் தொடர்ந்து வடகிழக்கு திசை காற்று வீசுகிறது என்றார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 16 ஆம் தேதிக்கு பின்னர் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார்.