Categories
தேசிய செய்திகள்

கல்யாணமான 3 மாதத்தில்… 2ஆவது கணவரை பிரிந்து சென்ற பெண்… 4 ஆண்டுகளுக்கு பின் ஹோட்டலில் நடந்த அதிர்ச்சி..!!

2ஆவது கணவரை விவாகரத்து செய்துவிட்டு மாயமான பெண் சொந்த ஊருக்கு வந்து ஹோட்டல் அறையில் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த பெண் அகிலா பரயில்.. இவர் முதல் கணவரை கடந்த 2016ல் விவாகரத்து செய்துவிட்டு, பின்னர் 2-ஆவதாக ஆம்புலன்ஸ் டிரைவரை மணந்த நிலையில் 3 மாதங்களில் அவரையும் பிரிந்தார்.. பின்னர் வீட்டில் இருந்த ரூ 30 லட்சம் பணம், 40 சவரன் நகைகள் மற்றும் காருடன் அகிலா காணாமல் போனார்..

இந்த சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக சொந்த ஊருக்கு வந்த அகிலா உறவினர்களை சந்தித்து விட்டு பின் ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருந்தார்.. அதனைத்தொடர்ந்து அங்கு அவர் தற்கொலை செய்து கொண்டார்.. அகிலா சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை தொடங்கினர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், விவாகரத்துக்கு பின்னர் நகைகள் மற்றும் பணத்துடன் சென்ற அகிலா அண்மையில் ஊர் திரும்பிய போது மிகவும் பலவீனத்துடன் காணப்பட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவரிடம் பணம் மற்றும் நகைகள் எதுவுமே இல்லை.. ஆனால் அந்த பெண் தற்கொலை குறித்து உறவினர்கள் யாருமே எங்களிடம் புகார் கொடுக்கவில்லை, நாங்களாக விசாரித்து வருகிறோம்..

அகிலாவின் தந்தை நல்ல நிதி நிலையில் உள்ள பெரிய பணக்காரர் ஆவார்..  இதனால்  தான் அவருக்கு அவ்வளவு பணமும், நகைகளும் கிடைத்துள்ளது.. இந்த 4 ஆண்டில் காசர்காட், கோழிக்கோடு மற்றும் ஆலப்புழா போன்ற பல்வேறு இடங்களுக்கு அகிலா சென்றிருக்கிறார். இந்த இடங்களுக்கு எல்லாம் யாருடன் அவர் சென்றார், எப்படி சென்றார் என்று தெரியவில்லை.

மேலும் அகிலாவின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.. விரைவில் இந்த சம்பவத்தின் உண்மைகள் அனைத்தும் வெளியேவரும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |