ராமநாதபுரத்தில் உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுவன் எதிர்பாராத விதமாக லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வீரசோழன் பகுதியில் அப்துல்ஹமீது என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மனைவி மற்றும் 12 வயது மகனான பசீர் அகமது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் கமுதியில் உள்ள தர்காவிற்கு வழிபாடு நடத்த சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வருவதற்கு ஜெகன் என்பவரின் ஆட்டோவில் திரும்பியுள்ளனர்.
அப்போது பசும்பொன் பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது அப்பகுதியில் வந்த லாரி மீது ஆட்டோ மோதியுள்ளது. இந்த விபத்திதில் ஓட்டுனரின் அருகில் அமர்ந்திருந்த பசீர் அகமது லாரியில் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் தகவலறிந்து வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.