Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மஞ்சள்காமாலை” குழந்தையை கொன்றுவிட்டு…. தாயும் தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு…!!

விழுப்புரத்தில் மஞ்சள்காமாலை நோயுடன் பிறந்த பச்சிளம் குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற பெண்ணை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம்  மாவட்டம் காவேரி பாகத்தை சேர்ந்த  மீனாட்சி என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக வாலாஜாபாத்தை  சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. பின்னர் கணவர் காச நோயாளி என கூறி அவரைப் பிரிந்த மீனாட்சி சென்னையில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.

அங்கு ஒருவருடன் ஏற்பட்ட உறவில் கர்ப்பமுற்ற மீனாட்சி ஒரு வாரத்திற்கு முன்பாக விழுப்புரம் அருகே கோவிலுக்கு சென்றுள்ளார். பின்  அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்த அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் மஞ்சள்காமாலை நோயுடன் குழந்தை பிறந்ததை அறிந்த அவர், குழந்தையை வாய்க்காலில் வீசி கொன்றுவிட்டு,

அவரும் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். பின் முழங்கால் அளவே தண்ணீர் இருந்ததால் மீனாட்சியின் தற்கொலை எண்ணம் நிறைவேறவில்லை. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு காவல் நிலையத்தில்  ஒப்படைத்தனர். மஞ்சள்காமாலை நோயுடன் பிறந்ததால் குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக மீனாட்சி காவல்துறையிடம் கூறியுள்ளார்.

Categories

Tech |