Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இரவு தூங்குவதற்கு பின்னாடி… “இதை செய்ய மறந்துடாதீங்க”…!!

சருமத்தை பாதுகாப்பதற்கான சிறந்த வழி குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 

நம் உடலில் பல பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய ஆற்றல் தண்ணீருக்கு உண்டு. உடலின் உள் பகுதிகளில் பிரச்சனை ஏற்படும் போது நன்றாக தண்ணீர் குடித்தால் கழிவு நீர் அதிகமாக வெளியேறும். இதன் மூலம் உடலில் உள் பகுதியில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகள் தானாகவே நீங்கிவிடும்.

அதேபோல்தான் வெளி பகுதிகளிலும் குறிப்பாக முகத்தில் அடிக்கடி தண்ணீர் தெளித்து நாம் கழுவி வர பல நன்மைகளை நமக்கு உண்டாக்குவதுடன், நம் முகத்தை பொலிவாக்கி அழகாக காட்டும். தண்ணீரால் முகத்தை அடிக்கடி கழுவுவது சரும பராமரிப்பிற்கு சிறந்த ஒன்று. அதேசமயம் இரவு தூங்குவதற்கு முன்பாக முகத்தை கண்டிப்பாக கழுவ வேண்டும்.

அவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். மேலும் முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்பட்டு சருமம் சுவாசிப்பதற்கு வழிவகை ஏற்படும். இதன்மூலம்  நல்ல நிம்மதியான உறக்கத்தை நாம் பெற முடியும்.

Categories

Tech |