Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடர் தோல்விக்கு பின்…” இவருக்கு பதில் இவர் விளையாடுவார்”… கிரிக்கெட் வாரியம் அதிரடி..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் கொண்டுவந்துள்ளதாக நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

விரைவில் நடக்க இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நான்கு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டதாக நிர்வாக குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மிக மோசமான தோல்வியை இந்திய அணி தழுவியது. இதையடுத்து விரைவில் நடக்கும் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அதிகமான வாய்ப்புகள் அளித்தும் அதை சரியாக பயன்படுத்தவில்லை என்ற காரணத்தினால் நீக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுப்மான் கில் ஓபனிங் வீரராக நாளை ஆடுவார். இவருக்கு இதுதான் முதல் ஆட்டம். இந்திய அணியில் கீப்பராக சாகா நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் இருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவர் நாளை இந்திய அணியில் கீபிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அணியின் ஆல்ரவுண்டர் ஹனுமா விஹாரி எப்போதும்போல் நீடிப்பார்.

இந்திய அணியின் கோலியின் இடத்தை யாரும் நிரப்பப் போவது இல்லை. கோலிக்கு பதிலாக கே எல் ராகுல் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கூடுதலாக ஒரு ஆல்ரவுண்டர் ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஷமிக்கு பதிலாக இந்திய அணியில் முகமது சிராஜ் இணைகிறார். இதுதான் இவருக்கு முதல் போட்டியாகும். எனவே இந்த மாற்றங்கள் அடுத்த போட்டியில் வெற்றி வாய்ப்பை தரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |