கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவின் பசவங்குடி என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய நண்பர்களுடன் வாட்ஸ்அப் குழு ஒன்றை ஆரம்பித்துள்ளார்.. அவர் குரூப் கிரியேட் செய்த சில நிமிடங்களிலே, மொபைல் போனுக்கு வந்த லிங்கை அந்தப்பெண் தவறுதலாக கிளிக் செய்து விட்டார்.. இதையடுத்து ஸ்மார்ட்போனின் மொத்த அதிகாரமும் ஹேக்கரின் கைக்கு சென்று விட்டது.
அந்தப்பெண் உருவாக்கிய குரூப்பில் இருந்த அனைவருக்கும் அவரது பெயரிலேயே ஆபாச செய்திகளை அனுப்பியுள்ளார்.. இதையடுத்து, அந்த பெண் உடனடியாக குரூப்பில் இருந்த அனைவருக்கும் மொபைலை யாரோ ஒருவன் ஹேக் செய்து விட்டான் என தகவல் தெரிவித்து விட்டு குரூப்பிலிருந்து விலகிவிட்டார்.
பின்னர் தான், ஹேக்கர் தன்னுடைய விளையாட்டை தொடங்கியுள்ளார். குரூப் ஆரம்பித்த அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு, உன்னுடைய நிர்வாண போட்டோ மற்றும் வீடியோவை அனுப்ப வேண்டும் என தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார்.. மேலும் படம் அனுப்பினால் பணம் தருவோம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த டார்ச்சரை தாங்கிக்கொள்ள முடியாத அந்தப்பெண், சைபர் பொலிசாரிடம் புகாரளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.