Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவின் விடுதலைக்கு பின்…. அதிமுக நான்காக பிரியும் – ப.சிதம்பரம் கருத்து…!!

சசிகலா விடுதலையானால் அதிமுக இரண்டாக உடைய வாய்ப்புள்ள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனைக் காலம் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் சசிகலா எப்போது வேண்டுமானாலும் சிறையிலிருந்து விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சசிகலா விடுதலை அதிமுகவினரிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கணித்து வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அவரால் அதிமுக வளர்கிறதோ இல்லையோ நான்காக உடைவதற்கு மட்டுமே வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்கள் தமிழக விவசாயிகளுக்கு என்ன நன்மை அளிக்கிறது என்றும், முதல்வர் என்னுடன் இது குறித்து விவாதிக்க தயாரா? என்றும்  சவால் விடுத்துள்ளார்.

Categories

Tech |