சசிகலா விடுதலையான பிறகு மன்னார்குடி சென்று அங்கு சில காலம் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் அமமுக கட்சியின் பிரமுகர் சசிகலாவின் தண்டனை காலம் முடிய உள்ளது. இந்நிலையில் அவர் வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ளதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு முன்னதாகவே சசிகலாவை விடுதலை செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சசிகலா விடுதலையான பிறகு நேரடியாக மன்னார்குடி சென்று அங்கு சில காலம் ஓய்வெடுத்த பிறகு அமமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.