Categories
உலக செய்திகள்

மீண்டும் தலைதூக்கிய கொரோனா… சீனாவில் அடுத்த ஊரடங்கு…. அதிர்ச்சியில் சீன அதிபர் ஷி ஜின் பிங் ….!!

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

சீனாவில் தொடங்கிய கொரோனா  தொற்றை பல நடவடிக்கைகளின் மூலம் கட்டுப்படுத்திய சீன அரசு தற்போது மீண்டும் தொற்றின் தாக்குதலை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் தலைநகர் பீஜிங்கில் நேற்று தொற்றினால் பாதிக்கப்பட்ட 2 பேர் உட்பட அந்நாட்டின் புதிதாக 10 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்று முடிவுக்கு வந்ததாக அந்நாட்டு அரசு கருதி வந்த நிலையில் புதிதாக 10 பேருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 56 நாட்கள் தொற்று இல்லாமலிருந்த தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் ஒருவருக்கு கொரோனா  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மேலும் இரண்டு பேருக்கு பீஜிங்கில் தொற்று  உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றை கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த பீஜிங்கில்  பதற்றம் உருவாகியுள்ளது.  சீனாவின் தலைநகர் ஏற்பட்ட மேலும் 6 கொரோனா  பாதிப்புகளை தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்ததையடுத்து பீஜிங் அதிகாரிகள் நகரத்தில் இருந்த மொத்த சந்தையை தற்காலிகமாக மூடியதோடு சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளனர்.

நேற்று பீஜிங்கில் புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் 2 பேரும் பெங்டாய் மாவட்டத்தில் இருக்கும் சீன இறைச்சி உணவு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வருபவர்கள். இரண்டு நாளில் மூன்று பேருக்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தபட்டிருப்பது ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |