சீனாவில் புதிதாக 52 நபர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சீனாவில் தான் முதன் முதலில் கொரோனாத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்பு, உலக நாடுகள், கொரோனா தொற்றுடன் போராடிக்கொண்டிருந்த சமயத்தில், சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. எனவே, சீனா முதல் நாடாக ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது அங்கு மீண்டும் தொற்று பரவ தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக 52 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில், 32 நபர்கள் உள்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், மீதமுள்ள 20 நபர்கள் பிற நாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது