விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மீன் வெட்டிப்பாறை அருவியில் பல வருடங்களுக்குப் பிறகு தண்ணீர் கொட்ட தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கையின் அழகை பெற்ற சுற்றுலா தளமான செண்பகத்தோப்பு பகுதியில் மீன் வெட்டிப் பாறை, சறுக்குப் பாறை முதலிய அருவிகள் உள்ளன.
பல ஆண்டுகளுக்கு பிறகு பெய்த தொடர் மழையால் . மீன் வெட்டிப் பாறை, சறுக்குப் பாறை முதலிய அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. அருவியில் குளித்தும், சறுக்கி விளையாடியும், சுற்றுலா பயணிகள் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .