ரயில்வே துறை சார்பில் தெற்கு மண்டலங்களில் இயக்கப்பட்ட ரயில் சேவை தடங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சென்னை மற்றும் மதுரை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே நிர்வாகம் ஜனவரி 4ஆம் தேதி முதல் ரத்து செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. இதன் காரணமாக மக்களின் பொருளாதார வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. மக்களின் நலனை கருதி ஊரடங்கு தளர்வு தமிழக அரசு அறிவித்து வந்தது. அதன்படி சென்னை புறநகர் ரயில் சேவையை அத்தியாவசிய பணியாளர்கள், ஊழியர்களுக்கு மட்டும் இயக்கப்படும் என அறிவித்திருந்தது.
பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்கலாம் என அனுமதி வழங்கியது. படர்ந்த இரு தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் பயணிப்பதற்கு ரயில்வே துறை அனுமதி வழங்கி இருந்த நிலையில் மீண்டும் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு சிறையில் ஜனவரி 4ஆம் தேதி முதல் ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளிடம் வரவேற்பு இல்லாத காரணத்தினால் இந்த ரயில் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.