இங்கிலாந்தில் ஓமிக்ரான் தொற்று தீவிரமாகி வருவதால் மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்த வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் சமீப நாட்களில் அதிவேகத்தில் கொரோனா பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒமிக்ரான் பாதிப்பும் அங்கு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தற்போது வரை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
மேலும், உலகிலேயே முதல் தடவையாக அந்நாட்டில் தான் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்திருக்கிறார். எனவே, அங்கு மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்த, பிரதமர் போரிஸ் ஜான்சன் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்த பின் இரண்டு வாரங்கள் கழித்து ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.