Categories
தேசிய செய்திகள்

வருகின்ற வாரத்தில்….. “மீண்டும் சோகம்” மத்திய அரசு எச்சரிக்கை…..!!

வருகின்ற வாரத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் பாலைவன வெட்டுக்கிளிகள் மீண்டும் படையெடுத்து தாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

சில மாதங்களுக்கு முன்பாக சோமாலியா நாட்டின் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை நாசம் செய்தது. குறிப்பாக இந்தியாவில் வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் பயிர் நிலங்களில் புகுந்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தின. 

இவைகள் ஏற்படுத்திய பாதிப்புகளின் தாக்கம் இன்றளவும் அந்த விவசாயிகள் மத்தியில் இருந்து வரும் சூழ்நிலையில், சோமாலியாவில் இருந்து கிழக்கு நோக்கி மீண்டும் புதிய பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம் படையெடுத்து வந்து கொண்டிருப்பதாகவும் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் வருகின்ற வாரத்தில் இந்த வெட்டுக்கிளிகள் நுழைவதற்கான வாய்ப்புகள் ஏராளம் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் குஜராத், ராஜஸ்தானில் 36 இடங்களில் வெட்டுக்கிளி  வட்ட அலுவலகங்கள்(LCO)  மூலம் இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |