Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியையை மாற்றாதீங்க… சாலை மறியலில் மாணவர்கள்… நிர்வாகம் எடுத்த முடிவு..!!

 பள்ளி தலைமை ஆசிரியை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செல்வமுருகன் மானிய நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அதில் 7 ஆசிரியர் பணியாற்றும் நிலையில் சுமார் 265 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் வாசுகி என்பவர் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 25 ஆண்டுகளாக அந்த பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

கடந்த சில நாட்களாக பள்ளி நிர்வாகத்திற்கும் தலைமை ஆசிரியையான வாசுகிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி நிர்வாகம் தலைமை ஆசிரியையை மாற்றி புதிய தலைமை ஆசிரியரை நியமிக்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் தலைமை ஆசிரியையை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்த காவல்துறையினர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் தலைமை ஆசிரியரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பின்னர் சுமூக முடிவு ஏற்பட்டதாக கூறி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை சாலை மறியலை கைவிட தலைமை ஆசிரியை கேட்டுக்கொண்டுள்ளார். இதன் விளைவாக அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |