7 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் கோர தாண்டவம் ஆடி வருகின்றது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து ஒரு சில தடுப்பு மருந்துகள் ஒப்புதல் அளிக்கப்பட்டு முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக ஏழு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இப்போதுள்ள சூழலில் சந்தையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி விற்கும் திட்டம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை. வெளிச்சந்தையில் விற்பனை செய்தால் சூழலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். எனவே எதிர்கால சூழலுக்கு ஏற்பவும், தேவைக்கு ஏற்பவும் அரசு முடிவெடுக்கும் என்று கூறியுள்ளார்.