இந்தியாவில் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான அணிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா டெஸ்டில் கலக்கிய தமிழக வீரர் நடராஜரின் பெயர் இடம்பெறவில்லை. முதல் டெஸ்ட் போட்டிகளுக்கான அணி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. விராட் கோலி கேப்டனாக திரும்பியுள்ளார். முதல் இரு டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகின்றன.
பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியும், 13 முதல் 17 வரை இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. இதில் நடராஜனின் பெயர் இடம்பெறவில்லை. அவருக்கு பதில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மற்றும் டவுனில் பயன்படக்கூடிய பேட்ஸ்மேனான அக்சர் பட்டியல் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் ஹாட்ரிக் பாண்டியா, வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா அணிக்கு திரும்பி உள்ளனர். தமிழக வீரர்கள் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் பெயர் இடம் பெற்றுள்ளது.