Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி…. “சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கிய இந்தியா”….!!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்னை வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி இன்று காலை சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்ட்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல் 9ம் தேதி வரையும், பிப்ரவரி 13 முதல் 17ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. 3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28ம் தேதி வரையும், கடைசி டெஸ்ட் மார்ச் 4 முதல் 8ம் தேதிவரை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத்திலும், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புனைவிலும் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையில் டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு சென்னை வந்த இங்கிலாந்து அணியினர் கொரோனா தடுப்பு முகாமில் தங்கியிருந்தனர். மூன்று கட்ட பரிசோதனைக்கு பிறகு யாருக்கும் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்திய பின்னர் முதல் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா அணியினரும் தனது பரிசோதனைகளை முடித்து விட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |