டிவிட்டருக்கு எதிராக சொந்தமாக தனது கருத்தை பதிவிடும் ஒரு புதிய தளத்தை உருவாக்க இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் முன்பு ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வந்தனர். இதை கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போது 5 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தன்னுடைய ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய விடியோவை ட்ரம்ப் தனது ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. இதனால் வன்முறையை தூண்டும் வகையில் இருந்த இந்த வீடியோக்களை டுவிட்டர்மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் தங்களுடைய பக்கங்களில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. இதையடுத்து தனது கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யும் வகையில் எதிர்காலத்தில் சொந்தமாக ஒரு தளத்தை உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக ட்ரம்ப் கூறியுள்ளார். அவர் பதிவிட்ட சில நிமிடங்களில் அந்த ட்வீட்டும் நீக்கப்பட்டுள்ளது.